ஜூனியர் ஆக்கி: பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

இந்திய ஜூனியர் ஆக்கி அணி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

Update: 2024-05-22 05:40 GMT

கோப்புப்படம்

ஆன்ட்வெர்ப்,

இந்திய ஜூனியர் ஆக்கி அணி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் ஆன்ட்வெர்ப்பில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்