புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்திடம் இந்திய அணி தோல்வி

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

Update: 2024-05-25 06:33 GMT

image courtesy: twitter/ @TheHockeyIndia

ஆன்ட்வெர்ப்,

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் உள்ளூர் அம்சத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

பெல்ஜியம் தரப்பில் ஹென்ரிக்ஸ் அலெக்சாண்டர் 2 கோலும், கேப்டன் டினாயெர் பெலிக்ஸ், சார்லியெர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய தரப்பில் அபிஷேக் மட்டுமே ஒரு கோல் அடித்தார். இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பெல்ஜியத்துடன் மோதுகிறது.

இதேபோல் இந்திய பெண்கள் அணியும் 0-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது.

Tags:    

மேலும் செய்திகள்