சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.சி.எப்.பை வீழ்த்தி வருமான வரி அணி வெற்றி

இன்று நடைபெற உள்ள ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி-தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2024-03-20 01:37 GMT

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 4-2 என்ற கோல் கணக்கில் எஸ்.டி.ஏ.டி.யை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப்.பை சாய்த்தது. வருமான வரி அணியில் கார்த்தி 2 கோல்களும், அருண்குமார், மாரீஸ்வரன் தலா ஒரு கோலும், ஐ.சி.எப். அணியில் ராகுல் யாதவ், சுரஜ் மின்ஸ் தலா ஒரு கோலும் போட்டனர்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் வங்கி-தமிழ்நாடு போலீஸ் (பிற்பகல் 2 மணி), இந்தியன் ஓவர்சீஸ்-ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி (பிற்பகல் 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்