சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.சி.எப். அணி வெற்றி

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.

Update: 2024-03-16 00:55 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணி 5-2 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீசை தோற்கடித்தது.

ஜி.எஸ்.டி. அணியில் தமிழரசன், ஹசன் பாஷா தலா 2 கோலும், செந்தில் குமார் ஒரு கோலும், மாநகர போலீஸ் அணியில் சஞ்சீவ் பலால், ராஜா தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய உணவு கழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது.

இன்னொரு ஆட்டத்தில் ஐ.சி.எப். 4-2 என்ற கோல் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை பதம் பார்த்தது. ஐ.சி.எப். அணியில் சஞ்சய் சால்கோ 2 கோலும், சுரஜ் மின்ஸ், சுரேந்தர் தலா ஒரு கோலும், எஸ்.டி.ஏ.டி. அணியில் ஆனந்தராஜ், அரவிந்த் தலா ஒரு கோலும் போட்டனர்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால்வரி - ஸ்டேட் வங்கி (பிற்பகல் 2 மணி), ஐ.ஓ.பி. - இந்தியன் வங்கி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்