சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.ஓ.பி. அணி வெற்றி

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, தமிழ்நாடு போலீஸ் அணியுடன் மோதியது.

Update: 2024-03-18 21:05 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) 6-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீசை பந்தாடியது. ஐ.ஓ.பி. அணியில் ரஹிம் ஷா 3 கோலும், பிரப்ஜோத் சிங் 2 கோலும், சுரேஷ் பாபு ஒரு கோலும் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி - அடையார் யுனைடெட் கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜி.எஸ்.டி. அணியில் செந்தில் குமாரும், அடையார் யுனைடெட் அணியில் ஆகாசும் கோல் அடித்தனர்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் எஸ்.டி.ஏ.டி. - ஏ.ஜி.அலுவலகம் (பிற்பகல் 2 மணி), ஐ.சி.எப். - வருமான வரி (பிற்பகல் 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்