ஜல்லிக்கட்டுக்கு ஆனந்த், ஸ்ரீகாந்த் ஆதரவு

முன்னாள் உலக செஸ் சாம்பியன் சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் ‘ஜல்லிக்கட்டு நமது கலாசாரத்தின் அடையாளம்.

Update: 2017-01-19 21:05 GMT
சென்னை,

முன்னாள் உலக செஸ் சாம்பியன் சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் ‘ஜல்லிக்கட்டு நமது கலாசாரத்தின் அடையாளம். அதற்கு மதிப்பளிக்க வேண்டும். நான் விலங்குகளின் நலனில் ஆர்வம் உள்ளவன் தான். ஆனால் இது அதைப்பற்றியது கிடையாது. ஜல்லிக்கட்டு நமது கலாசாரத்துடனும், வாழ்வாதாரத்துடனும் சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனது மாநிலம் மீண்டும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் எழுச்சி கண்டுள்ளது. தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் நவீனமயமானாலும், கலாசாரத்தின் அடித்தளத்தை மறவாதவர்களாக இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், ‘ஜல்லிக்கட்டு எல்லோரும் ரசிக்கக்கூடிய பாரம்பரிய விளையாட்டாகும். இதற்கு தடை விதிக்க ‘பீட்டா’ எடுத்த நடவடிக்கை தவறானதாகும். ஜல்லிக்கட்டில் விலங்குகளுக்கு கொடுமை இழைப்பதாக கருதினால், உலகம் முழுவதும் நடைபெறும் குத்துச்சண்டை போட்டி அதைவிட கொடூரமானது தானே?’ என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் செய்திகள்