உலக டூர் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதி முன்னேற்றம்

சாத்விக்-சிராக் ஜோடி மலேசியா இணையை சந்தித்தது.;

Update:2025-12-20 06:29 IST

ஹாங்சோவ்,

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இரட்டையரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்ற இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி தனது கடைசி லீக்கில் மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூ யிக் இணையை சந்தித்தது.

இதில் முதல் செட்டை இழந்த போதிலும் சரிவில் இருந்து திடமாக மீண்டெழுந்த சாத்விக்- சிராக் கூட்டணி 17-21, 21-18, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

தனது பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்த சாத்விக்- சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. அவர்கள் அரையிறுதியில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையுடன் மோத உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்