6 வயதில் செஸ் தரவரிசையில் இடம்: சென்னை சிறுமி சாதனை
‘பிடே’ ரேட்டிங்கில் இடம் பிடித்த தமிழகத்தின் இளம் வீராங்கனை என்ற சிறப்பை ரயானிகா சிவராம் பெற்றுள்ளார்.;
சென்னை,
தமிழகத்தின் இளம் வீராங்கனையான சென்னையை சேர்ந்த 6 வயது செஸ் வீராங்கனை ரயானிகா சிவராம் சர்வதேச செஸ் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) ரேட்டிங்கில் அவர் 9வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மொத்தம் 1,429 புள்ளிகள் பெற்றுள்ளார். இதன் மூலம் ‘பிடே’ ரேட்டிங்கில் இடம் பிடித்த தமிழகத்தின் இளம் வீராங்கனை என்ற சிறப்பை ரயானிகா சிவராம் பெற்றுள்ளார்.
ரயானிகாவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.