பிற விளையாட்டு
துளிகள்

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.

* இந்தியாவுக்கு எதிராக வருகிற 12-ந்தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தசைப்பிடிப்பு காயத்தால் ஆஸ்திரேலிய தொடரில் ஆடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

* 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜூலை 21-ந் தேதி தொடங்குகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ராணி ராம்பாலும், துணை கேப்டனாக சவிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* 6 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை (இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறது. இதில் டிரா செய்தாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம்.

* தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு அவர் 11.30 வினாடிகளில் இலக்கை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. சொந்த சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.

* மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 22-20, 21-19 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) வெளிே-யேற்றி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-14 என்ற நேர்செட் கணக்கில் பிரைஸ் விலெர்டெஸ்சை (பிரான்ஸ்) வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. காவல்துறையின் 58-வது மாநில விளையாட்டு போட்டி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தொடங்கி வைத்தார்
காவல்துறையின் 58-வது மாநில விளையாட்டு போட்டியை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜூ தொடங்கி வைத்தார். இதில் 615 பேர் பங்கேற்றனர்.
2. மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்
கரூரில் நடந்த மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் பரிசு வழங்கி பாராட்டினார்.
3. கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி தொடக்கம் 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
4. தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் அணி சாம்பியன்
தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருப்பூர் அணி 2-ம் இடம் பிடித்தது.
5. 8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்து விட்டு ரூ.10 ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு ரூ.10 ஆயிரம் கோடியில் தமிழகத்தில் உள்ள ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.