பிற விளையாட்டு
சோட்டிவில்லி தடகள போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்

சோட்டிவில்லி தடகள போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். #NeerajChopra
பாரீஸ்,

பிரான்ஸில் சோட்டிவில்லி தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

சோட்டிவில்லி தடகள போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.17 மீட்டர் தூரம் வீசி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மேலும் இந்தப்போட்டியில் கலந்து கொண்ட ஆண்டிரியன் மார்டாரே 81.48 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், எடிஸ் மாடுசெவிசியஸ் 79.31 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

இதில் 2012 ஒலிம்பிக் சாம்பியன் கேஸ்ஹார் வால்கோட் 78.26 மீட்டர் தூரம் வீசி ஐந்தாவது இடம் பிடித்து ஏமாற்றினார்.

இந்நிலையில் அடுத்த மாதம் இந்தோனேஷியாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில், கலந்து கொள்ள உள்ள நீரஜ் சோப்ராவின் மீது, தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.