ஜூனியர் ஆசிய மல்யுத்த போட்டி: வெள்ளி வென்றார் திவ்யா கக்ரான்

ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் திவ்யா கக்ரான் வெள்ளி பதக்கம் வென்றார். #JuniorAsianWrestlingChampionship

Update: 2018-07-20 05:16 GMT
புதுடெல்லி,

ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் திவ்யா கக்ரான் வெள்ளிப்பதக்கமும், கருணா மற்றும் ரீனா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனையான திவ்யா கக்ரான், பெண்கள் 68 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் கிரிகிஸ்தானின் மீரிம் ஜுமானஜாரோவை எதிர்கொண்டார்.

இதில் ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜுமானஜாரோ, 0-11 என்ற புள்ளிக்கணக்கில் திவ்யாவை வீழ்த்தினார். இதன் மூலம் திவ்யா கக்ரான் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மற்றோரு போட்டியில், பெண்கள் 55 கி.கி., எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீனா, உஸ்பெகிஸ்தானின் கோடிசா நஜிமோவாவை 8-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் 76 கி.கி., எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை கருணா, மங்கோலியாவின் யுன்பாகனா பட்டாசுலூவை 10-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

மேலும் பெண்கள் 50 கி.கி., எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிவானி பவார், கஜகஸ்தானின் மரினாவிடம் 2-3 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து  வெண்கலப்பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

மேலும் செய்திகள்