பிற விளையாட்டு
ஹங்கேரி பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் அபாரம்

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி அங்குள்ள மாக்யோராட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
மாக்யோரோட்,

இதில் 306.630 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப் பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 37 நிமிடம் 16.427 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவர் சுவைத்த 5-வது வெற்றி இதுவாகும். ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 2-வதாகவும், பின்லாந்தின் ரெய்க்கோனன் 3-வதாகவும் வந்தனர்.

இதுவரை நடந்துள்ள 12 சுற்று முடிவில் ஹாமில்டன் 213 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெட்டல் 189 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். அடுத்த சுற்று போட்டி பெல்ஜியத்தில் அடுத்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.