பிற விளையாட்டு
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி; 2வது சுற்றில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் போராடி வெற்றி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் போராடி தகுதி பெற்றுள்ளார்.
நான்ஜிங்க்,சீனாவில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் கிதம்பி ஸ்ரீகாந்த், ஸ்பெயின் நாட்டின் பேப்லோ அபியன் உடன் விளையாடினார்.இந்த போட்டியில் முதற்செட்டை கைப்பற்றிய ஸ்ரீகாந்த் அடுத்த செட்டை அபியனிடம் பறி கொடுத்து விட்டார்.  அதன்பின்னர் போராடி 3வது செட்டை கைப்பற்றினார்.இந்த போட்டி 62 நிமிடங்கள் வரை நீடித்தது.  போட்டியின் முடிவில் 21-15, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.கடந்த வருடம் 4 பட்டங்களை வென்றுள்ள இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் டேரன் லீவ் உடன் விளையாட உள்ளார்.  முந்தைய காலங்களில் உலக தரவரிசையில் 10வது இடத்தில் இருந்தவரான லீவ் கடந்த 2012ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தினை வென்றவராவார்.