பிற விளையாட்டு
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் அஜய் ஜெயராம்

வியட்நாம் ஓபன் பேட்மிண்டனின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் அஜய் ஜெயராம் முன்னேறினார்.
ஷி மின்க் சிட்டி,

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷி மின்க் சிட்டியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-14, 21-19 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யு கராஷியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 34 நிமிடம் தேவைப்பட்டது.