பிற விளையாட்டு
மாநில நீச்சல் போட்டி சென்னை வீரர் தனுஷ் புதிய சாதனை

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 72–வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நடந்து வருகிறது.
சென்னை, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 72–வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் சென்னை வீரர் தனுஷ் பந்தய தூரத்தை 1 நிமிடம் 04.78 வினாடியில் கடந்து புதிய போட்டி சாதனை படைத்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு 2011–ம் ஆண்டில் சென்னையை சேர்ந்த ஜெ.அக்னீஸ்வர் 1 நிமிடம் 05.08 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. பெண்களுக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் கோவை வீராங்கனை பாவிகா துகார் பந்தய இலக்கை 9 நிமிடம் 34.35 வினாடியில் கடந்து தனது முந்தைய சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.