பிற விளையாட்டு
சைக்கிள் பந்தய வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்

சைக்கிள் பந்தய வீராங்கனை ஒருவருக்கு சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜெர்மனியின் புகழ்பெற்ற சைக்கிள் பந்தய வீராங்கனை 27 வயதான கிறிஸ்டினா வோஜல். 11 முறை உலக சாம்பியான இவர் ஒலிம்பிக்கிலும் 2 முறை தங்கம் வென்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியின் கோட்பஸ் நகரில் நடந்த சைக்கிள் பந்தய போட்டியில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார்.

அதிவேகமாக சைக்கிளை ஓட்டிய அவர் மற்றொரு வீராங்கனை மீது மோதியதுடன் அருகில் இருந்த தடுப்பு சுவற்றிலும் மோதி விழுந்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு முதுகுதண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கு தீவிர சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் அவரது உடல்நிலை விவரம் வெளியாகியுள்ளது. முதுகுதண்டு காயத்தால் இனி என்னால் நடக்கக்கூட முடியாத அளவுக்கு முடங்கி போய் விட்டேன் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இத்துடன் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.