புரோ கபடி: ஜெய்ப்பூர்–டெல்லி ஆட்டம் ‘டை’

6–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்று இரவு பஞ்ச்குலாவில் அரங்கேறிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்– தபாங் டெல்லி அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் 37–37 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.

Update: 2018-12-20 21:15 GMT

பஞ்ச்குலா, 

6–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்று இரவு பஞ்ச்குலாவில் அரங்கேறிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்– தபாங் டெல்லி அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் 37–37 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. இந்த சீசனில் ‘டை’ ஆன 13–வது ஆட்டம் இதுவாகும். கொல்கத்தாவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்– தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன்–தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே, ஜெய்ப்பூர் அணிக்காக ஆடிய 35 வயதான அனுப்குமார், கபடியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நடப்பு தொடரில் 13 ஆட்டங்களில் ஆடி ‘ரைடு’ மூலம் 38 புள்ளிகள் சேர்த்த அனுப் குமார், 2016–ம் ஆண்டு உலக கோப்பை கபடியில் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

மேலும் செய்திகள்