இந்திய பளுதூக்கும் வீராங்கனை காயத்திற்கு பின் முதல் போட்டியில் தங்கம் வென்றார்

இந்திய பளுதூக்கும் வீராங்கனை சானு காயத்திலிருந்து மீண்டு தாய்லாந்தில் நடந்த போட்டி ஒன்றில் தங்கம் வென்றுள்ளார்.

Update: 2019-02-07 11:45 GMT
புதுடெல்லி,

இந்திய பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு (வயது 24).  மணிப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றவர்.  கடைசியாக கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த்  போட்டியில் கலந்து கொண்டு 196 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.

அதன்பின் கடந்த 9 மாதங்களாக காயத்தினால் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.  இந்த நிலையில், தொடர் சிகிச்சைக்கு பின் காயத்திலிருந்து மீண்டு, தாய்லாந்து நாட்டில் நடந்த ஈ.ஜி.ஏ.டி. கோப்பைக்கான பளுதாக்குதல் போட்டியில் அவர் கலந்து கொண்டார்.

இதில், 49 கிலோ எடை பிரிவில் சானு மொத்தம் 192 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார்.  2வது இடம் பெற்று ஜப்பானின் மியாகே ஹிரோமி (183 கிலோ) வெள்ளி பதக்கமும், 3வது இடம் பெற்று பப்புவா நியூ கினியாவின் லாவோ டிக்கா தவுவா (179 கிலோ) வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்