ஆசிய விளையாட்டு போட்டி: அடுத்தடுத்து 2 வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டியில் அடுத்தடுத்து 2 வெள்ளி பதக்கங்களை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.;

Update:2023-09-24 07:47 IST

பெய்ஜிங்,

ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951-ம் ஆண்டு முதல் அரங்கேறி வருகிறது. இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த திருவிழாவில் தடகளம், வில்வித்தை, நீச்சல், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், ஆக்கி, பேட்மிண்டன், வாள்சண்டை, குத்துச்சண்டை, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையாக விளையாட்டுகளில் மொத்தம் 481 பந்தயங்கள் நடைபெறுகிறது.

இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தென்கொரியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான், பக்ரைன், வங்காளதேசம், பூடான், ஈரான், கஜகஸ்தான், குவைத், சவுதி அரேபியா, சிங்கப்பூர் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. அதேபோல், துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றது.

Tags:    

மேலும் செய்திகள்