ஆசிய விளையாட்டு போட்டிகள் : 22 தங்கப்பதக்கம் உள்பட 95 பதக்கங்களுடன் பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 95 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

Update: 2023-10-06 04:24 GMT

ஹாங்சோவ்,

45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் 14-வது நாளான இன்றும் விறு விறுப்பாக நடைபெற்றன. 

ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா இதுவரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

ஆசிய விளையாட்டில் பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் விவரம்

  1. சீனா- 187 தங்கம், 104 வெள்ளி, 62 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 353 

  2. ஜப்பான்: 47 தங்கம், 57 வெள்ளி, 62 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 166

  3. தென்கொரியா: 36 தங்கம், 49 வெள்ளி, 84 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 169

  4. இந்தியா: 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 95

  5. உஸ்பெகிஸ்தான்: 20 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 64

  6. சீன தைபே: 17 தங்கம், 16 வெள்ளி, 25 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 58

  7. வடகொரியா: 11 தங்கம், 18 வெள்ளி, 10 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 39

  8. தாய்லாந்து: 10 தங்கம், 14 வெள்ளி, 30 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 54

  9. பஹ்ரைன்: 10 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 18

  10. கஜகஸ்தான்: 9 தங்கம், 18 வெள்ளி, 41 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் - 68

Tags:    

மேலும் செய்திகள்