லைவ்: ஆசிய விளையாட்டு - ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தல்

ஆசிய விளையாட்டு தொடரின் 15-வது நாளான இன்று மட்டும் இந்தியா 6 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.

Update: 2023-10-07 01:09 GMT

ஆசிய விளையாட்டு தொடரில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. 




Live Updates
2023-10-07 10:48 GMT

ஆசிய விளையாட்டின் செஸ் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என இரண்டிலுமே இந்திய அணி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.

2023-10-07 10:26 GMT

ஆசிய விளையாட்டு தொடரின் மல்யுத்தம் ஆண்கள் 86 கிலோ எடைப்பிரிவு ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் தீபக் புனியா மல்யுத்த போட்டியில் ஈரானின் யஸ்தானி என்ற வீரரை எதிர்த்து விளையாடினார். இதில் தீபக் புனியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.


2023-10-07 09:50 GMT



2023-10-07 09:40 GMT

ஆசிய போட்டி: பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.  

2023-10-07 09:29 GMT

இந்திய ஆண்கள் கபடி அணிக்கு தங்கம்

ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி ஈரானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டி நிறைவடைய 2 நிமிடங்கள் இருந்தபோது நடுவரின் முடிவு குறித்து இரு அணிகளும் மாறி மாறி புகார் தெரிவித்ததால் போட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின், பிரச்சனை சரி செய்யப்பட்டு போட்டி தொடங்கியது. இறுதியில் 33 - 29 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

2023-10-07 09:14 GMT

ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்த போது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. எனினும், இந்திய அணிக்கு தங்கம் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. கிரிக்கெட் போட்டியில் மகளிர் அணியும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

2023-10-07 09:09 GMT

ஆசிய விளையாட்டு ஆடவர் கபடி இறுதிப்போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஈரான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் நடுவர்களின் முடிவுக்கு இரு அணிகளுமே ஆட்சேபம் தெரிவித்ததால் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

20 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போட்டி முடிவதற்கு 2 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், போட்டியில் இந்த திடீர் பரபரப்பு தொற்றியுள்ளது.  போட்டி  நடுவர்கள் முடிவை எடுக்க முடியாமல் திணறி வருவதால் போட்டியின் முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடரின் கபடி போட்டியில் ஈரான் தங்கம் வென்றது. இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து தங்க பதக்கத்தை தவற விட்டது. இதனால், இந்த இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் தற்போது போட்டி நிறுத்தி வைக்கப்படும் அளவுக்கு போட்டி உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இரண்டு அணிகளுமே 26 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.  

2023-10-07 08:32 GMT

பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா இதுவரை 26 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-07 08:28 GMT

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 21-18, 21-16 என்ற நேர் செட்களில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. தென்கொரியாவை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிரங் சந்திரசேகர் ஷெட்டி இணை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. 

2023-10-07 08:11 GMT

கபடி:

கபடி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஈரான் மோதி வருகின்றன. பரபரப்பாக நடந்து வரும் இப்போட்டியில் தற்போதைய நிலவரப்படி 28-28 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்