லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

Update: 2023-10-01 01:19 GMT


Live Updates
2023-10-01 14:25 GMT

ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

2023-10-01 13:55 GMT

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டு தொடரின் 100 மீட்டர் மகளிர் தடை தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஜோதி யர்ராஜிக்கு முதலில் வெண்கலம் கிடைத்த நிலையில், சீன வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வெள்ளி பதக்கம் பெறும் வாய்ப்பை ஜோதி யராஜி பெற்றார்.

2023-10-01 13:55 GMT



2023-10-01 13:12 GMT

 ஆசிய விளையாட்டு: வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்றார். 58.62 மீட்டர் தூரம் வீசி வெண்கல பதக்கத்தை சீமா புனியா தனதாக்கினார்.   

2023-10-01 12:57 GMT

நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

2023-10-01 12:53 GMT


ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் 1,500 மீட்டருக்கான ஓட்ட பந்தயத்தில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியாவின் அஜய்குமார் வெள்ளி பதக்கமும், ஜான்சன் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினர். பந்தய இலக்கை 3:38.94 மற்றும் 3:39.74 நேரத்தில் எட்டி பதக்கங்களை இரு வீரர்களும் வென்றனர்.

2023-10-01 12:31 GMT

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய அணி பதக்கங்களை குவித்து வருகிறது. 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.

2023-10-01 12:09 GMT

ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் குண்டு எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்தியாவின் தஜிந்தர் பால் சிங் 20.36 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்தார். இதனால் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்றுள்ள தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

2023-10-01 11:33 GMT

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 3,000மீ ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் ஓட்டம்) போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்றுள்ள 12-வது தங்கம் இதுவாகும்.

2023-10-01 11:23 GMT

மகளிர் 50 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால், இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. தாய்லாந்து வீராங்கனை சுதாமத் ரக்‌ஷத்தை எதிர்த்து விளையாடிய இந்தியாவின் நிக்ஹாத் ஸாரீன் 2:3 என்ற புள்ளிகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்