கனடா ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி
இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.;
Image : PTI
கல்காரி,
கனடாவின் கல்காரி நகரில் கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை யமகுச்சி என்பவரை எதிர்த்து விளையாடினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமகுச்சியிடம் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.