கேன்டிடேட் செஸ் போட்டி; குகேஷ் - ரஷிய வீரர் மோதிய 10-வது சுற்று டிரா

கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-16 12:35 GMT

Image Courtesy: @FIDE_chess / Twitter

டொராண்டோ,

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 10- வது சுற்று நடந்தது.

சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியை எதிர் கொண்டார். 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது. இருவரும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய ஆட்ட மும் டிராவில் முடிந்து இருந்தது.

10 சுற்றுகள் முடிவில் குகேசும், இயன் நெபோம்னி யாச்சியும் தலா 6 புள்ளி களுடன் முன்னிலையில் உள்ளனர். இன்னும் 4 சுற்றுகளே எஞ்சியுள்ளன.மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 10-வது ரவுண்டில் சக நாட்டவரான விதித் குஜராத்தியுடன் மோதினார். இந்த ஆட்டமும் டிரா ஆனது.

பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.மற்ற ஆட்டங்களில் ஹிகாரு நகமுரா , பேபி யானோ (இருவரும் அமெரிக்கா) வெற்றி பெற்றனர். அவர்கள் முறையே நிஜாத் அப்சோவ் (அஜர்பைஜான்), அலிரேசா பிரவுசியா (பிரான்ஸ்) ஆகியோரை தோற்கடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்