தைவான் ஓபன் தடகளம்: ஈட்டி எறிதலில் மானு தங்கம் வென்றார்

தைவான் ஓபன் தடகள போட்டியில் இந்திய வீரர் டி.பி.மானு ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.;

Update:2024-06-02 03:17 IST

image courtesy: PTI

புதுடெல்லி,

தைவான் ஓபன் தடகள போட்டி அந்த நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரரான டி.பி.மானு 6-வது மற்றும் கடைசி வாய்ப்பில் 81.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

கர்நாடகாவை சேர்ந்த 24 வயது மானு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை (85.50 மீட்டர்) எட்டிப்பிடிக்காததால் இன்னும் தகுதி பெறவில்லை. அவரது சிறந்த ஈட்டி எறிதலான 84.35 மீட்டர் தூரத்தை கூட அவர் நெருங்கவில்லை. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா ஆகியோர் இந்தியா சார்பில் ஏற்கனவே தகுதி பெற்று இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்