ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் - வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணி
உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது.;
Image Courtesy : SAI Media
தென் கொரியாவில் நடைபெற்றுவரும் உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது.
ஆடவர் 25 மீட்டர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சமீர், ராஜ்கன்வார் சிங், மகேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, சீன அணியுடன் மோதியது. இதில் ஆயிரத்து 730 புள்ளிகள் பெற்று, 2ம் இடம் பிடித்த இந்திய அணி, வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியது.