ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

பிரியா மாலிக், ஜெர்மனியின் லாரா செலிவ் குஹானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.;

Update:2023-08-18 17:08 IST

image tweeted by @Media_SAI

ஜோர்டான்,

20 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் பிரியா மாலிக், 5-0 என்ற புள்ளி கணக்கில் லாரா செலிவ் குஹானை வீழ்த்தினார். பிரியா மாலிக்குக்கு இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த போதிலும் அவர் வெற்றி பெற்று அசத்தினார்.

இதன் மூலம் அவர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். கடந்த ஆண்டு ஆன்டிம் பங்கல் தங்கம் வென்று இருந்தார். தற்போதைய போட்டித் தொடரில் ஆன்டிம் பங்கல், 53 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்