தேசிய வலுதூக்குதல் போட்டி: தமிழக வீராங்கனைக்கு வெண்கலப்பதக்கம்
தேசிய மாஸ்டர்ஸ் கிளாசிக் வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவின் ராஜம் நகரில் நடந்தது.;
கோப்புப்படம்
சென்னை, -
தேசிய மாஸ்டர்ஸ் கிளாசிக் வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவின் ராஜம் நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான 76 கிலோ உடல் எடைப்பிரிவில் தமிழகத்தின் டாக்டர் ஆர்த்தி அருண் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அவர் ஸ்குவாட், பெஞ்ச்பிரஸ், டெட் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 327.5 கிலோ எடை தூக்கி 3-வது இடத்தை பெற்றார்.
சென்னையை சேர்ந்த ஆர்த்தி அருண் வலது கையில் எலும்பு முறிவுக்கு ஆபரேஷன் செய்து கொண்ட பிறகு மீண்டும் களம் திரும்பி சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரு இடங்களை மராட்டிய, கர்நாடக வீராங்கனைகள் பிடித்தனர்.