பெண்கள் உலக குத்துச்சண்டை: 2-வது சுற்றில் நிகாத் ஜரீன், மனிஷா வெற்றி

13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.;

Update:2023-03-20 03:35 IST

image courtesy: Boxing Federation twitter

புதுடெல்லி,

13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் ஆப்பிரிக்க சாம்பியனான அல்ஜீரியாவின் பவுலாம் ரொமாசாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். அடுத்து அவர் ஹெரேரா அல்வாரஸ் பாத்திமாவை (மெக்சிகோ) சந்திக்கிறார்.

இதே போல் கடந்த முறை வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் மனிஷா மான் (57 கிலோ) தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ரஹிமி டினாவை 5-0 என்ற கணக்கில் சாய்த்தார்.

Tags:    

மேலும் செய்திகள்