பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி அணி சாம்பியன்
டேபிள் டென்னிஸ் போட்டி யில் பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி அணி சாம்பியன்;
கோவை பாரதியார் பல்கலைக்கழக அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலைகல்லூரியில் நடைபெற்றது. போட்டிகளை கல்லூரி முதல்வர் ஜெகஜீவன் தொடங்கி வைத்தார்.
இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் ஆண்கள் பிரிவில் கோவை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி அணி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது, கொங்கு கலைக்கல்லூரி அணி 2-ம் இடம், ஸ்ரீ கிருஷ்ணா கலை கல்லூரி அணி 3-ம் இடம், சி.எம்.எஸ். கலை கல்லூரி அணி 4-ம் இடம் பிடித்தது.
பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரி அணி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது, பி.எஸ்.ஜி. கிருஷ்ணம் மாள் கல்லூரி அணி 2-ம் இடம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி 3-ம் இடம், கொங்கு கல்லூரி அணி 4-ம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் குமரேசன் செய்திருந்தார்.