ஆசிய வலுதூக்குதல் போட்டி சின்னம் வெளியீடு
கோவையில் நடைபெறும் ஆசிய வலுதூக்குதல் போட்டிக்கான சின்னத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.;
சென்னை,
தமிழ்நாடு வலுதூக்குதல் சங்கம் மற்றும் இந்திய வலுதூக்குதல் சம்மேளனம் ஆகியவை சார்பில் ஆசிய வலுதூக்குதல் போட்டி கோவையில் வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்கான சின்னத்தை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது அருகில் தமிழ்நாடு வலுதூக்குதல் சங்க தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜா, செயலாளர் நாகராஜன், பொருளாளர் ரவிகுமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.