மாநில சிலம்பம் போட்டி: சென்னை வீரர்கள் தங்கம் வென்றனர்
மாநில சிலம்பம் போட்டியில் சென்னை வீரர்கள் தங்கம் வென்றனர்.;
கோப்புப்படம்
சென்னை,
ஈரோடு மாவட்ட சிலம்பம் சங்கம் சார்பில் 6-வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் ஆண்களுக்கான சீனியர் பிரிவில் (56-64 கிலோ) சென்னை வீரர் அஸ்வின் தங்கப்பதக்கம் வென்றார்.
இதேபோல் சென்னையை சேர்ந்த தினேஷ் (48-56 கிலோ), மகேஸ்வரன் (59-70 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவில் தங்கப்பதக்கத்தை தனதாக்கினர்.