டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் விலகினார்.
ஸ்பெயின்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். 36 வயதான செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் களம் திரும்பினார். உடல் தகுதியை கருத்தில் கொண்டு செரீனா வில்லியம்ஸ் இந்த போட்டியில் இருந்து விலகியதாக தெரிகிறது.