டென்னிஸ்
ப்ராஹ் ஓபன் டென்னிஸ்; புஜர்னெஸ்குவை வீழ்த்தி பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்

ப்ராஹ் ஓபன் டென்னிஸ் போட்டியில் புஜர்னெஸ்குவை வீழ்த்தி பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் பெற்றார். #PragueOpen
ப்ராஹ்,

செக்குடியரசு ப்ராஹ் ஓபன் டென்னிஸில் ரொமானியா வீராங்கனையை மிகாயேலா புஜர்னெஸ்குவை வீழ்த்தி பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

செக்குடியரசின் தலைநகர் ப்ராஹ்வில் ப்ராஹ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவா ரொமானியா வீராங்கனை மிகாயேலா புஜர்னெஸ்குவை எதிர்கொண்டார்.
2-வது தரவரிசையில் இருக்கும் கிவிட்டோவிற்கு எதிரான முதல் செட்டை 7-வது இடத்தில் இருக்கும் மிகாயேலா புஜர்னெஸ்கு 4-6 எனக் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட கிவிட்டோவா 2-வது செட்டை 6-2 எனவும், 3-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.