பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஆஸ்டாபென்கோ தோல்வி

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது.

Update: 2018-05-27 22:00 GMT

பாரீஸ், 

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 4–ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 6–1, 6–4, 7–6 (7–1) என்ற நேர் செட்டில் முகமது சவாத்தை (எகிப்து) தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 5–7, 3–6 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரினா கோஸ்லோவாவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார். பிரெஞ்ச் ஓபனில் நடப்பு சாம்பியன் முதல் சுற்றுடன் வெளியேறுவது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதே போல் தரவரிசையில் 85–வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் குயாங் 6–4, 7–5 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் மங்கை வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.

மேலும் செய்திகள்