டென்னிஸ்
ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை - தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக முதல்அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை,

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கலப்பதக்கம் வென்றார். வெண்கலப்பதக்கம் வென்ற அவருக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். அத்துடன் வெண்கலப்பதக்கம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘உங்கள் சாதனைக்கும், பங்களிப்புக்கும் தமிழக அரசு சார்பில் வாழ்த்துகிறேன். எதிர்காலத்தில் இந்தியாவுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் நீங்கள் பல பதக்கங்களை வென்று பெருமை சேர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.