அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரருக்கு எதிரான ஆட்டத்தில் கவனத்தை ஈர்த்த இந்திய வீரர்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ரோஜர் பெடரருக்கு எதிரான சுற்றை இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.

Update: 2019-08-27 05:11 GMT
நியூயார்க்,

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.  இதில் உலகின் மூன்றாம் நிலை  வீரர் ரோஜர் பெடரரை இந்தியாவின் இளம் வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் மிகவும் உற்சாகமாக ஆடிய சுமித் நாகல், ரோஜர் பெடரருக்கு கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.

பல்வேறு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்ற ரோஜர் பெடரரை முதல் செட்டில் வீழ்த்தியதன் மூலம், அனைவரையும் சுமித் நாகல் வியக்க வைத்தார்.  எனினும், அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட பெடரர்  6-1, 6-2, 6-4 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

மேலும் செய்திகள்