ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஒன்ஸ் ஜபீர், படோசா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.;
பவுலா படோசா (image courtesy: Adelaide International Twitter)
மெல்போர்ன்,
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ள இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, அமெரிக்க வீராங்கனை டெய்லர் டவுன்சென்ட் உடன் மோதினார். இந்த போட்டியில் படோசா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர், உக்ரைன் வீராங்கனை யூலியாவுடன் மோதினார். இந்த போட்டியில் ஜபீர், 6-3, 6-1 என்ற செட் கணக்கில் யூலியாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.