இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானுவுக்கு ஆபரேஷன் - பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனை தவற விடுகிறார்

எம்மா ரடுகானு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.;

Update:2023-05-05 01:01 IST

லண்டன்,

2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி சுற்று வீராங்கனையாக நுழைந்து பட்டம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த இங்கிலாந்து இளம் வீராங்கனை எம்மா ரடுகானு கடந்த சில மாதங்களாக கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் காயத்தை சரிசெய்ய ஆபரேஷன் செய்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது உலக தரவரிசையில் 85-வது இடத்தில் இருக்கும் 20 வயது எம்மா ரடுகானு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் 'நான் காயத்தில் இருந்து மீண்டு களம் திரும்ப சில மாதங்கள் பிடிக்கும். காயத்தால் இந்த கோடையில் நடைபெறும் போட்டிகளை தவறவிடுவது ஏமாற்றம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் வருகிற 28-ந் தேதி தொடங்கும் பிரெஞ்சு ஓபன் மற்றும் ஜூலை 3-ந் தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை தவறவிடுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்