ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் - பிரிட்டன் இளம் வீரர் ஜேக் டிராப்பர் 2-ம் சுற்றுக்கு தகுதி
அமெரிக்க வீரர் புரூக்ஸ்பியை பிரிட்டன் வீரர் ஜேக் டிராப்பர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.;
பிரசல்ஸ்,
ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், அமெரிக்க வீரர் புரூக்ஸ்பி உடன் பிரிட்டன் இளன் வீரர் ஜேக் டிராப்பர் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜேக் டிராப்பர் வெற்றி பெற்றார். இதையடுத்து நாளை நடைபெறும் 2-ம் சுற்று ஆட்டத்தில் போலந்து வீரர் ஹர்காஸ் உடன் ஜேக் டிராப்பர் மோத உள்ளார்.