பிரெஞ்சு ஓபன் : ரோகன் போபண்ணா- மாட்வே மிடில்கூப் இணை 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இந்தியாவின் போபண்ணா, டச்சு வீரர் மிடில்கூப் இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.;
Image Courtesy : AFP
பாரிஸ்,
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, டச்சு வீரர் மாட்வே மிடில்கூப் இணை பிரெஞ்சு இணை லூகா வான் ஆஸ்சே, சாஸ்கா குய்மார்ட் வேயன்பர்க் இணையை எதிர்கொண்டனர்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய-டச்சு ஜோடி இந்த போட்டியை 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்றனர். இதன் மூலம் அவர்கள் நாளை மறுதினம் நடைபெறவுள்ள 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.