பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; முதல் சுற்று ஆட்டத்தில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

Update: 2024-05-27 00:59 GMT

Image Courtesy: AFP

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த முன்னணி வீரரான ஆண்டி முர்ரே சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட வாவ்ரிங்கா 6-4, 6-4,6 -2 என்ற செட் கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார். சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியுடைய வீரராக பார்க்கப்பட்ட ஆண்டி முர்ரே முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்