பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.;

Update:2024-06-06 22:14 IST

இகா ஸ்வியாடெக் (image courtesy: WTA twitter via ANI)

பாரீஸ்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக், 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கோகோ காபை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்