ஜெனீவா ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

Update: 2024-05-24 15:26 GMT

Image Courtesy: AFP

ஜெனீவா,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தாமஸ் மச்சாக்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஜோகோவிச், 2வது செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 1-6 என்ற புள்ளிக்கணக்கில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 6-0, 1-6 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்