மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

Update: 2024-04-27 21:21 GMT

Image Courtesy: AFP  

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் பிரேசிலின் தியாகோ மான்டீரோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தியாகோ மான்டீரோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்