மியாமி ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.;
Image Courtesy: AFP
மியாமி,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2ம் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசை சேர்ந்த முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பாலா படோசாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (3ம் சுற்று) முன்னேறினார்.