மியாமி ஓபன் டென்னிஸ்; ரோகன் போபண்ணா இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை காலிறுதிக்கு முன்னேறியது.

Update: 2024-03-26 10:14 GMT

கோப்புப்படம்

மியாமி,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை போலந்தின் ஜான் ஜீலின்ஸ்கி - மொனோக்காவின் ஹ்யூகோ நிஸ் இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய போபண்ணா இணை 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஜான் ஜீலின்ஸ்கி - ஹ்யூகோ நிஸ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. போபண்ணா இணை நாளை நடைபெறும் காலிறுதியில் நெதர்லாந்தின் செம் வெர்பீக் - ஆஸ்திரேலியாவின் ஜான் பேட்ரிக் ஸ்மித் இணையை எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்