ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்தார் நோவக் ஜோகோவிச்..!!

சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் சாதனையை நோவக் ஜோகோவிச் முறியடித்துள்ளார்.;

Update:2022-07-11 22:20 IST

Image Tweeted By @DjokerNole

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ்தொடர் லண்டனில் நேற்று நடந்து முடிந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த சாம்பியன் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இது விம்பிள்டன் தொடரில் ஜோகோவிச் வென்ற 7வது சாம்பியன் பட்டமாகும். அவர் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் அவர் சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்துள்ளார். ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்