இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரபேல் நடால் விலகல்

நடால் விலகியதன் காரணமாக இந்திய வீரர் சுமித் நாகலுக்கு இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.;

Update:2024-03-07 12:31 IST

image courtesy:AFP

கலிபோர்னியா,

22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

ஏறக்குறைய 1 ஆண்டுக்கு பின் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். ஆனால் அந்த தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகினார். அந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால் அவர் இண்டியன்வெல்ஸ் ஓபனில் இருந்தும் விலகியுள்ளார்.

நடால் விலகியதன் காரணமாக இந்திய வீரர் சுமித் நாகல் அந்த தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்