அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.;
Image Courtesy: AFP
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவரோ உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.